24 May 2012

தருவே



செடியே!

கிளையே!

மரமே!

தருவே!

எல்லா உயிர்கட்கும் தெரிந்த உன்னருமை,

என் ஆறறிவு மக்களுக்கு ஏனோ தெரியவில்லை.
எந்த குருவும் புகட்டாத ஞானம் எம் சித்தார்த்தனுக்கு தந்தவள் நீ...
எம் கிராம மக்கள் கண்ட நீதிகளின் கால சாட்சி நீ...
எத்தனை இடர் வரினும் கலங்காமை எனும் பாடம் தந்த குரு நீ...
மழை கூட மனிதரை கொன்றிட்டது, நிலம் கூட எம் மக்களை காவு கேட்டது...
ஆனால் என் இனிய மரமே!
நீ மட்டும் எப்படி
உன் வலி மறந்து
உயிர் வளி தருகிறாய்??!
உன் பச்சை பட்டாடையை கொஞ்சகொஞ்சமாய் கிழித்து
எம் மக்கள் தமக்கு
இறுதிச்சடங்கு சேலை நெய்கின்றனர்...
சுவாசத்தரு உன்னை,
நேசமில்லா மக்கள்
வதைப்பதைக்கண்டு,
மனமெங்கும் ரணமாய்,
உன்னைப்போல் நானும்
ஊமை வலியில்....

2 comments: