குட்டி குட்டி பொய்கள் நிறைந்த அழகான பால்யம் அது...
பூச்சாண்டி கையில் பிடித்துக் கொடுக்காமல் இருக்கவே முழுங்கிய சோற்று உருண்டைகள்...
பூச்சாண்டி கையில் பிடித்துக் கொடுக்காமல் இருக்கவே முழுங்கிய சோற்று உருண்டைகள்...
சாமி கண் குத்த வந்திடுமோ என்ற பயத்தில் உறங்கா இரவுகள்...
குட்டி போடுமென்று வெள்ளை புத்தகம் நடுவே பாதுகாத்து வந்த மயிலிறகு...
குட்டி போடுமென்று வெள்ளை புத்தகம் நடுவே பாதுகாத்து வந்த மயிலிறகு...
வானுக்கு தெரியாமல் கையில் பொத்தி நல்ல பற்கள் முளைக்க வேண்டி மண்ணில் பயபக்தி உடன் புதைத்த பால் பற்கள்...
நிலாவில் தனியாக இருக்கும் பாட்டி தெரிகிறாளா என்று ஏக்கமாய் பார்த்த நிலா நாட்கள்...
கடவுளிடம் கூட்டி போகாமல் போய்விட்டதாய் செத்து போன தாத்தாவை கோபித்து அழுத நாட்கள்...
மேகத்திற்கு அப்பால் கடவுள்கள் இருப்பதாய் அண்ணாந்து பார்த்த பொழுதுகள்...
மேகத்திற்கு அப்பால் கடவுள்கள் இருப்பதாய் அண்ணாந்து பார்த்த பொழுதுகள்...
பொய்கள் சுவாரசியமாய் ஆயினும் எவரையும் துன்புறுத்தாததாய்.....
அழகான பொய்கள் நிறைந்த அழகிய பால்யம் அது...!!!