எத்தனை எத்தனை விடை தெரியா கேள்விகள்...
கேட்டும் கேட்கப்படாமலும்!
உள்ளும் புறமும் தான் எத்தனை கேள்விகள்..அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா?
பெரியவனாகி என்னவாக போற?
வானம் ஏன் நீலமா இருக்கு ?
நிலா ஏன் வட்டமா இருக்கு?
கோழியில இருந்து முட்டை வந்துச்சா முட்டையிலிருந்து கோழி வந்துச்சா?
ஆண் குழந்தை பிறக்குமா இல்லை பெண் குழந்தையா?
பதைபதைக்க வைக்கும், சிரிக்க சிந்திக்க வைக்கும் கேள்விகள்தான் எத்தனை? படம் நல்லா இருக்கா? என்ற கேள்விக்கான பதில் தானே இயக்குனரின் வாழ்க்கை.
அவளுக்கு என்னை பிடிக்குமா? என்ற கேள்வியில் ஒளிந்திருக்கும் சொல்லப்படாத காதல்கள் தான் எத்தனை?
பிரிந்து சென்ற பழைய காதலியை காணும் போது என்ன கேள்வி கேட்க தோன்றும்?
?
மழை வரும்போதெல்லாம் மனம் தானாய் பிரியமானவரை நினைப்பது ஏன்??
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி எழாத தருணம் உண்டோ ?
'நான் நல்லவனா கெட்டவனா?' என்ற ஒற்றை கேள்வி எத்தனை மாற்றங்கள் கொண்டுவரலாம்.
யாருக்காகவோ யாரோ சேர்த்து வைத்த கேள்விகள் தானோ ரகசியங்கள் ஆகின்றன?
செத்துட்டா எங்க போவாங்க என்ற சிறுமியின் கேள்விக்கு விடை தான் என்ன?
ஏதோ ஒரு கேள்விக்கு விடை தேடவோ துறவம்?
வாழ்வின் இறுதி நாளில் நமக்கு வீசப்படும் ஒற்றை கேள்விக்கான பதில் தான் நம் மொத்த வாழ்கையுமா???
விடை தெரியா கேள்விகள்...
பதில் தேடும் நாம்.
வாழ்க்கை இன்னும்
சுவாரசியமாய்...