29 Oct 2012

கேள்விகள்

எத்தனை எத்தனை விடை தெரியா கேள்விகள்...

கேட்டும் கேட்கப்படாமலும்! 

உள்ளும் புறமும் தான் எத்தனை கேள்விகள்..அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா?

பெரியவனாகி என்னவாக போற? 

வானம் ஏன் நீலமா இருக்கு ?

நிலா ஏன் வட்டமா இருக்கு?

கோழியில இருந்து முட்டை வந்துச்சா முட்டையிலிருந்து கோழி வந்துச்சா?

ஆண் குழந்தை பிறக்குமா இல்லை பெண் குழந்தையா?
பதைபதைக்க வைக்கும், சிரிக்க சிந்திக்க வைக்கும் கேள்விகள்தான் எத்தனை? படம் நல்லா இருக்கா? என்ற கேள்விக்கான பதில் தானே இயக்குனரின் வாழ்க்கை.

அவளுக்கு என்னை பிடிக்குமா? என்ற கேள்வியில் ஒளிந்திருக்கும் சொல்லப்படாத காதல்கள் தான் எத்தனை? 

பிரிந்து சென்ற பழைய காதலியை காணும் போது என்ன கேள்வி கேட்க தோன்றும்?


மழை வரும்போதெல்லாம் மனம் தானாய் பிரியமானவரை நினைப்பது ஏன்??

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி எழாத தருணம் உண்டோ ?


'நான் நல்லவனா கெட்டவனா?' என்ற ஒற்றை கேள்வி எத்தனை மாற்றங்கள் கொண்டுவரலாம். 

யாருக்காகவோ யாரோ சேர்த்து வைத்த கேள்விகள் தானோ ரகசியங்கள் ஆகின்றன? 

செத்துட்டா எங்க போவாங்க என்ற சிறுமியின் கேள்விக்கு விடை தான் என்ன?

ஏதோ ஒரு கேள்விக்கு விடை தேடவோ துறவம்?

வாழ்வின் இறுதி நாளில் நமக்கு வீசப்படும் ஒற்றை கேள்விக்கான பதில் தான் நம் மொத்த வாழ்கையுமா???

விடை தெரியா கேள்விகள்...


பதில் தேடும் நாம்.


வாழ்க்கை இன்னும்


சுவாரசியமாய்...







20 Jul 2012

முரண்


தன் வீட்டு பிள்ளை 

பாலுக்கு  அழாமல் இருக்க,
பலூனுக்கு அழும் பிள்ளையை 
தினம் தினம் தேடும் 
பலூன் வியாபாரி ..

24 May 2012





கடல் இருக்கும் இடம் நதிக்கு எப்படி தெரியும் ????

மழை பெய்யும்போது குருவி எங்கு ஒதுங்கும் ????

பட்டாம்பூச்சிகள் எங்கு தூங்கும் ????

அருகில் இருப்பவரை விட தொலைவில் இருப்பவரையே நினைத்து ஏங்குவது ஏன் ????

அம்மாவின் கோவம் மட்டும் அடுத்த உணவு வேளை வரை மட்டுமே நீடிப்பது எப்படி ????

யாரென்று தெரியாமலே கூட குழந்தைகளால் மட்டும் நேசமாய் எப்படி சிரிக்க முடிகிறது ????

எவருக்கேனும் விடை தெரியுமா ???

தெரிந்தால் சொல்லுங்களேன் ...

Swami Vivekananda

When i asked god for strength
He gave me difficult situations to face...

When i asked god for Brain and Brown
He gave me puzzles in life to solve...

When i asked god for Happiness
He showed me some unhappy people...

When i asked god for wealth
He showed me how to work hard...

When i asked god for Favors
He showed me opportunities to work hard...

When i asked god for peace
He showed me how to help others...

God gave me nothing i wanted
He gave me everything i needed...

Swami Vivekananda

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? ♥

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? ♥ ♥

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ? ♥
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால் சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? ♥

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? ♥ வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம். ♥ ♥

♥ ♥ ♥ ♥ ♥ பாரதி ♥ ♥ ♥ ♥ ♥




ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று..

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை

ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே.. .

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே...

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே...

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோ ம் - வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்...

நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப்
பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.

பாரதியார் ♥

பாரதி



நெஞ்சு பொறுக்கு திலையே -- இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சி யஞ்சிச் சாவார் -- இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் -- இந்த
மரத்தில் என் பார்; அந்தக் குளத்தில் என்பார்,
துஞ்சுது முகட்டில் என்பார் -- மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்.

மந்திர வாதிஎன்பார் -- சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்;
யந்திர சூனியங்கள் -- இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே -- ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை -- இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்

சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் -- ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்
துப்பாக்கி கொண்டு ஒருவன் -- வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்
அப்பால் எவனோசெல்வான் -- அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற்பார்
எப்போதும் கைகட்டுவார் -- இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார்.

நெஞ்சு பொறுக்கு திலையே -- இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் -- ஒரு
கோடிஎன்றால் அது பெரிதாமோ?
ஐந்துதலைப் பாம்பென்பான் -- அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் -- பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.

சாத்திரங்கள் ஒன்றுங்காணார் -- பொய்ச்)
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் -- ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்;
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் -- தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவர்;
ஆத்திரங் கொண்டே இவன்சைவன் -- இவன்
அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார்.

நெஞ்சு பொறுக்கு திலையே -- இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே
கஞ்சி குடிப்பதற்கிலார் -- அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே -- நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே -- இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.

எண்ணிலா நோயுடையார் -- இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள் போல் -- பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் -- பத்து
நாலா யிரங்கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே -- இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்.

 பாரதி .. ♥ ♥ ♥



தனி ஒரு
வார்த்தையாய்
தவிக்கிறேன்...

நீ வந்து சேர்
வாக்கியமாய்
வாழ்க்கைப்புத்தகம்
நிறைப்போம்...

அப்பா


அப்பா... விரல் பிடித்து சாலையில்
நடக்கையிலே
முகத்தில்
பூத்திடும் கர்வம்...

வண்டியில்
முன்னால்
அமர்ந்து உலகை
காண்கையிலே
எத்தனை
இன்பம்...

அப்பாவின்
கவனம் ஈர்க்க
நடத்திய அழுகை
நாடகங்கள்...

அம்மாவிடமே
அதிகம்
பேசுவதாய்
பொறாமைப்பட்ட
நொடிகள்...

அப்பாவின் பிறந்த
நாளுக்காய் தேடித் தேடி வாங்கிய
பரிசுகள்...

அப்பாவின் தோள்
மீது அமர்ந்து
பார்த்த
சாமியாட்டங்கள்...

சாலை மறைக்கிறது
குழந்தாய் என்று
வண்டியின் பின்
அமரச் சொன்னதற்கு
உண்ணாமல்
போராட்டமே
செய்த சிறு
பிள்ளைத்தனம்...

அம்மா கூட
திட்டிடுவாள்
வளர்ந்த
பிள்ளைக்கு
இத்தனை
செல்லமென்று...


ஆனாலும் கையில் ஏந்திய நாள் முதல்
இன்று வரை
மாறாத
அரவணைப்பு
அப்பாவுடையது...

செல்ல அப்பாவுக்காக இந்த மகளின்
வேண்டுகோள்
இனி தாய்
நாட்டை தந்தை
நாடென்று
மாற்றுங்கள்...



தருவே



செடியே!

கிளையே!

மரமே!

தருவே!

எல்லா உயிர்கட்கும் தெரிந்த உன்னருமை,

என் ஆறறிவு மக்களுக்கு ஏனோ தெரியவில்லை.
எந்த குருவும் புகட்டாத ஞானம் எம் சித்தார்த்தனுக்கு தந்தவள் நீ...
எம் கிராம மக்கள் கண்ட நீதிகளின் கால சாட்சி நீ...
எத்தனை இடர் வரினும் கலங்காமை எனும் பாடம் தந்த குரு நீ...
மழை கூட மனிதரை கொன்றிட்டது, நிலம் கூட எம் மக்களை காவு கேட்டது...
ஆனால் என் இனிய மரமே!
நீ மட்டும் எப்படி
உன் வலி மறந்து
உயிர் வளி தருகிறாய்??!
உன் பச்சை பட்டாடையை கொஞ்சகொஞ்சமாய் கிழித்து
எம் மக்கள் தமக்கு
இறுதிச்சடங்கு சேலை நெய்கின்றனர்...
சுவாசத்தரு உன்னை,
நேசமில்லா மக்கள்
வதைப்பதைக்கண்டு,
மனமெங்கும் ரணமாய்,
உன்னைப்போல் நானும்
ஊமை வலியில்....

அக்கா


அம்மா காட்டிய முதல் தோழி
அவ்வப்போது எதிரியும் கூட.....

எனக்கு பிடித்த வண்ணங்களில் பல்லி மிட்டாயும்
பாதி கடித்து கொடுத்த லாக்டோ கிங்குமே
அவள் எனக்காய் கொடுத்த முதல் பரிசாய் இருக்கும் .....

பல்லாங்குழியில் தொடங்கி பட்டாம் பூச்சி பிடிப்பதுவரை
அவள் விளையாட்டுகளில் என்னையும் சேர்த்துகொண்ட
பிரியமான தோழி.....

ஆயினும் டீச்சர் விளையாட்டில் மட்டும் அவளே டீச்சராய்
இருந்ததில் இன்று வரை எனக்கு கோபமே .....

அவளா நானா யார் அழகென்று
எங்கள் வீட்டு மாயக்கண்ணாடி முன் சண்டையிட்டாலும்
சேலை கட்டி வருகையிலே
ஒரு நிமிடம் நானும் ஒத்துக் கொள்ளவே செய்கிறேன்
அவள் அழகி என்று.....

சொப்பு விளையாட்டில்
அத்தனை ருசியாய் மண் சமைத்தவள்
இன்று அம்மாவையும் மிஞ்சி விட்டால் சுவையில்......

எலி பூனையாய் சண்டை இட்டாலும்
இந்த எலியை என்றும்
விட்டு கொடுத்ததே இல்லை
அந்த செல்ல பூனை .....

செய்யும் தவறுகளுக்கு தண்டிக்கையில்
அப்பாவில் பாதியாகிவிடும் அவள்...
அம்மாவின் மறு உருவமாய்
மன்னிக்கவும் செய்கிற தேவதை.....

அவளுக்காய் தேடி அலைந்து வாங்கி கொடுத்த பரிசை விடவும்
அதன் மேல் இருந்த மஞ்சள் ரோஜா
அழகாய் இருக்கிறதென்று சொல்லி
வெறுப்பேற்றவும் செய்யும் கள்ளி அவள் .....

கர்வமும் கொஞ்சம் பொறாமையும்
கண்களில் மின்னும்..
என் தோழிகளெல்லாம்
அவளின் ரசிகையாய் ஆனதில்.....

கை பிடித்து நடந்ததில்லை
தோள் சாய்ந்து கதைகள் பேசியதில்லை
இரவெல்லாம் அரட்டை அடித்ததில்லை.....

ஆயினும் தண்ணீரில் கரைத்த சர்க்கரையாய்
கண்ணுக்கு தெரியாமல்
தித்தித்துக் கொண்டே இருக்கிறது
எங்களுக்கிடையே ஆன நேசம் ....

வெற்றி ♥



Brother



Dear bro...


I still remember d day when mom showed you and told ' a gift for you'.....

You wrapped in a pink cloth and with a heavenly smile..

And The days we ran to catch butterflies...

The days we fought for chocolates...

The days we heard fairy tales from granny...

The days we spent playing cricket...

I m sure I started living my childhood again..

Gone are those days and all of a sudden my little man grown up with a moush and bristles, get down from his sports bike and say ' hey sis why are you not growing at all... Drink complan' with a playful smile...

I wonder is this d same baby who used to cry for mumma's attention and laughs on seeing tom and jerry...

But mom what you said is true... He is really a wonderful gift for me...

Luv you brother.. ♥ ♥ ♥


Vetri... ♥

மழைக் காதலன்

    
எந்த அறிவிப்பும் இன்றி வருகிறான் அவன்....     
சொல்லாமல் முத்தமிட்டு 
குளிர் காற்றினால் தழுவி 
வந்த வேகத்தில் சென்றும் விடுகிறான் 
எம் மழைக்காதலன் 
வாசம் மட்டும் என் வசம் விட்டு ...                      


23 May 2012

காக்கையை
ஏமாற்றி உனக்கு
சோறூட்ட
முயல்கிறேன்...
நீயோ என்னை
ஏமாற்றி
காக்கைக்கு
சோறூட்டுகிறாய்...

எறும்பு முதல்
நிலவு வரை
அனைவரிடமும்
பேசிவிட்டு
நிம்மதியாய்
உறங்குகிறாய் நீ...
என்னதான்
பேசியிருப்பாயோ
என்று
உறக்கமில்லாமல்
நான்...

போதும் ரொம்ப
சிரிக்காதே கள்வா...
என் ஜாடிப் பூக்கள்
யாவும்
வாடிப்போகின்றன
உன் சிரிப்பிடம்
தோற்று...


இன்னும் சறிது
நேரம் அழுதால்
தேவதைகளும்
விசாரிக்க
வந்திடுவர்
அழாதே கண்ணா...


உன் கைபட்டு
மோட்சம் பெறவே
வரிசையில்
காத்திருக்கின்றன
பொம்மைகள்...


சரியான மாயக்காரன் நீ...
உன்னை கொஞ்சுபவரெல்லாம்
குழந்தையாக்குகிறாய்...


போதும் சிரித்து மழுப்பாதே...
இப்பொழுதாவது
சொல்லிவிடு
உன் கனவில்
வருவது யாரடா...


பல்லிரண்டு
போதுமா பாலகா...
பொம்மைகளை
துவம்சம் செய்ய...


ஒசாமா
உன்னுடன்
ஒரு நாள்
இருந்திருந்தால்
அமைதித் தூதன்
ஆகியிருப்பானோ...


செல்லக் குழந்தாய்...
என்னிடம் மட்டும்
ரகசியம் சொல்
நீ கடவுள்
குழந்தையா?
இல்லை கடவுளே நீ தானா...


கனவுகள் சுமந்த கண்கள் 

பயம் கலந்த பார்வை 

சிறகு விரிக்கத்துடிக்கும் பறவையாய் நாம் 

வழி மாறி போன முதல் பேருந்து பயணங்கள்...

assignment seminar என்று அறியா பெயர்கள்.. 

section dissection என்று  கனவில் இறந்த தவளைகளும் இலைகளும் ..

நன்றாய் தூங்கவே ஒதுக்கப்பட்ட ஆங்கில தமிழ் வகுப்புகள்.. 

அடுத்த அம்மாவாய் நோட்ஸ் கொடுத்து தாலாட்டும் ஆசிரியை... 

என்று புத்தகம் நடுவில் நண்பர்கள் தெரிந்த முதல் வருடம் போய்...

நண்பர்கள் நடுவில் புத்தகம் தெரிந்த இரண்டாம் வருடம்... இனிய வருடம்..

seminar internals பயம் போய் 

bunking chatting காலமது..  

லைப்ரரியில் இல்லாத புத்தகம் தேடி... 

கேண்டீனில் இல்லாத கடலை போட்டு.. 

section கள்  மாத்தி சடு குடு ஆடி ..

நல்ல வகுப்பென்று நற் பெயர் வாங்கி ..

கல கல உணவு வேளையில் solanum கூட்டு, allium சாம்பார் என்று கேட்பவரை லக லக ஆக்கிய இரண்டாம் வருடம்...

அரை நாள் விடுப்புக்கு இல்லாத பாட்டியை பலமுறை கொன்று..

டூர் என்ற பெயரில் அதகளம் பண்ணி ..

முகம் அறிந்த பெயர் மறந்த பல தோழிகள் எங்குமாய் ..

சீனியர் என்று இல்லாத கொம்பொன்று தலையிலே முளைத்து ..

மற்றவரின் பயம் கலந்த பார்வையை ரசித்து.. 

நல்ல நாளில் வராத நம் மக்கள் கூட culturals  அன்று full attendance போட்ட கடைசி வருடம் ..

கடைசி நாளில் சின்ன சிரிப்பு , சீண்டல்,

 கண்ணோரம் சிறு துளி கண்ணீர் என்று 

அணைத்துகொண்டு இந்த நேரம் இப்படியே நீளாத 

என்று ஏங்கிய அது ஒரு கல்லூரி காலம் ....

நம் வாழ்க்கை புத்தகத்தில் என்றும் வண்ண பக்கங்களாய் நம் கல்லூரி நாட்கள்....  <3