24 May 2012

அப்பா


அப்பா... விரல் பிடித்து சாலையில்
நடக்கையிலே
முகத்தில்
பூத்திடும் கர்வம்...

வண்டியில்
முன்னால்
அமர்ந்து உலகை
காண்கையிலே
எத்தனை
இன்பம்...

அப்பாவின்
கவனம் ஈர்க்க
நடத்திய அழுகை
நாடகங்கள்...

அம்மாவிடமே
அதிகம்
பேசுவதாய்
பொறாமைப்பட்ட
நொடிகள்...

அப்பாவின் பிறந்த
நாளுக்காய் தேடித் தேடி வாங்கிய
பரிசுகள்...

அப்பாவின் தோள்
மீது அமர்ந்து
பார்த்த
சாமியாட்டங்கள்...

சாலை மறைக்கிறது
குழந்தாய் என்று
வண்டியின் பின்
அமரச் சொன்னதற்கு
உண்ணாமல்
போராட்டமே
செய்த சிறு
பிள்ளைத்தனம்...

அம்மா கூட
திட்டிடுவாள்
வளர்ந்த
பிள்ளைக்கு
இத்தனை
செல்லமென்று...


ஆனாலும் கையில் ஏந்திய நாள் முதல்
இன்று வரை
மாறாத
அரவணைப்பு
அப்பாவுடையது...

செல்ல அப்பாவுக்காக இந்த மகளின்
வேண்டுகோள்
இனி தாய்
நாட்டை தந்தை
நாடென்று
மாற்றுங்கள்...



No comments:

Post a Comment