கனவுகள் சுமந்த கண்கள்
பயம் கலந்த பார்வை
சிறகு விரிக்கத்துடிக்கும் பறவையாய் நாம்
வழி மாறி போன முதல் பேருந்து பயணங்கள்...
assignment seminar என்று அறியா பெயர்கள்..
section dissection என்று கனவில் இறந்த தவளைகளும் இலைகளும் ..
நன்றாய் தூங்கவே ஒதுக்கப்பட்ட ஆங்கில தமிழ் வகுப்புகள்..
அடுத்த அம்மாவாய் நோட்ஸ் கொடுத்து தாலாட்டும் ஆசிரியை...
என்று புத்தகம் நடுவில் நண்பர்கள் தெரிந்த முதல் வருடம் போய்...
நண்பர்கள் நடுவில் புத்தகம் தெரிந்த இரண்டாம் வருடம்... இனிய வருடம்..
seminar internals பயம் போய்
bunking chatting காலமது..
லைப்ரரியில் இல்லாத புத்தகம் தேடி...
கேண்டீனில் இல்லாத கடலை போட்டு..
section கள் மாத்தி சடு குடு ஆடி ..
நல்ல வகுப்பென்று நற் பெயர் வாங்கி ..
கல கல உணவு வேளையில் solanum கூட்டு, allium சாம்பார் என்று கேட்பவரை லக லக ஆக்கிய இரண்டாம் வருடம்...
அரை நாள் விடுப்புக்கு இல்லாத பாட்டியை பலமுறை கொன்று..
டூர் என்ற பெயரில் அதகளம் பண்ணி ..
முகம் அறிந்த பெயர் மறந்த பல தோழிகள் எங்குமாய் ..
சீனியர் என்று இல்லாத கொம்பொன்று தலையிலே முளைத்து ..
மற்றவரின் பயம் கலந்த பார்வையை ரசித்து..
நல்ல நாளில் வராத நம் மக்கள் கூட culturals அன்று full attendance போட்ட கடைசி வருடம் ..
கடைசி நாளில் சின்ன சிரிப்பு , சீண்டல்,
கண்ணோரம் சிறு துளி கண்ணீர் என்று
அணைத்துகொண்டு இந்த நேரம் இப்படியே நீளாத
என்று ஏங்கிய அது ஒரு கல்லூரி காலம் ....
நம் வாழ்க்கை புத்தகத்தில் என்றும் வண்ண பக்கங்களாய் நம் கல்லூரி நாட்கள்.... <3

No comments:
Post a Comment