To all those who miss their grandma..
பிரியமானவளே....
ஓயாமல் உன் நினைவுகள் வந்து
என்னை ஓய்வில்லாமல் செய்கிறது ....
காலம் வரைந்த ஓவியமாய்
உன் தோல் சுருக்கங்கள்
ஆசையாய் தடவிய
பாச தருணங்கள்
இழக்கிறேனடி...
எந்த தலையணையும்
இன்று வரை தந்ததில்லை
உன் மடி தந்த சுகம்...
பாசமாய் தலை கோதி
அழகான கதைகள் சொல்ல
நீ இல்லையடி...
வெற்றிக் கோப்பைகள் உண்டு
ஆனால் உன் நெற்றி முத்தங்களுக்கே
ஏங்குகிறேன் ..
நிஜத்தில் இல்லாத நீ
கனவில் மட்டும் தினம் தினம் ...
உன் பிரிவின் சோகம்
என் தலையணைக்கும்
நிலவுக்கும் மட்டுமே
தெரிந்த ரகசியம்....
நேசிப்பவர்களின் மரணம் என்றும் ரணமே
எனதினியவளே ஏன் எனைவிட்டு பிரிந்தாய்...
No comments:
Post a Comment